2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இளம் பெண் கடத்தல் : ஒருவருக்கு விளக்கமறியல்: 6 பேருக்கு பிணை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண் உட்பட 6 பேரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரபிணையில் செல்லவும், பிரதான சந்தேக நபரை மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று(22) உத்தரவிட்டார்.

அத்துடன், மேற்படி நபர்களின் வதிவிடத்தினை உறுதிப்படுத்தும் சான்றிதழை கிராம அலுவலரிடம் பெற்று தம்மிடம் சமர்ப்பிக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவையும், குறித்த வாகனத்தின் சாரதியினையும் கடத்தப்பட்ட பெண்ணையும் இன்று (22) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X