2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பூநகரி – சங்குப்பிட்டி பால நிர்மாணத்தில் 95 வீதம் பூர்த்தி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 08 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

பூநகரியின் சங்குப்பிட்டி இறங்குதுறை மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டை இணைக்கும் பால நிர்மாணப் பணிகளில் 95 சதவீதமானவை தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் 188 மீற்றர் நீளமான இந்த பாலம் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இந்த வருட இறுதியில் திறந்துவைக்கப்படுமெனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது கொழும்பில் இருந்து ஆனையிறவு ஊடான யாழ்ப்பாண குடாநாட்டிற்குச் செல்லும் பாதையை விட, சங்குப்பிட்டியின் ஊடான பாதை தூரம் குறைந்ததாக அமையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--