Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், என்.ராஜ்
வடமாகாணத்தில் 15 குளங்கள் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில், இன்று ஆளுநரின் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது, ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் 3 குளங்களாக மொத்தம் 15 குளங்கள் புனரமைக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், இக்குளங்களின் புனரமைப்புக்கு தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் முதற்கட்டமாக 11.65 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்குளங்கள் ஆழமாக்கப்பட்டு, அகலமாக்கப்பட்டு, மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கலந்துரையாடலில், ஆளுநரின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கிளிநொச்சி பிரதேச செயலாளர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025