Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜனவரி 21 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லையென்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், பல்வேறுபட்ட கூட்ட தொடர்களுக்கு பிறகு அதாவது கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு மீண்டும் கிளிநொச்சி இப்படி பல கூட்டங்களுக்கு பிறகு ஒரு பொதுவான அறிக்கை தயாரிப்புக்கு எல்லோரும் ஒன்றுபட்டார்களென்றார்.
இன்னும் குறிப்பிடுவதாக இருந்தால் அதாவது நாங்கள் மாத்திரம்தான் ஒரே ஒரு தமிழ்த் தேசிய வாதிகள் என்றும், மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் என்றும் சொல்லப்பட்டு வந்தது எனத் தெரிவித்த அவர், அதாவது தாங்கள் மாத்திரம் தான் இனப்படுகொலை என்பதை உலகமெங்கும் கொண்டுசென்றோம். மற்றவர்கள் வாய் துறக்கின்றார்கள் இல்லை என்று சொல்லி வந்தவர்கள் எல்லாம் அவர்கள் சொல்லிவந்த வரைபை நீங்கள் பார்த்தால் இன படுகொலை என்ற ஒரு வார்த்தை அதில் இல்லை எனவும் கூறினார்.
'நான் சொல்லுவது என்னவென்றால் அவர்கள் அதை கொண்டுவந்திருக்க வேண்டும். அவர்கள்தான் தேசியவாதிகள். அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு சுமந்திரன் சொன்னார் எனக்கு இதில் உடன்பாடு இல்லை, ஆனாலும் நான் ஏற்று கொள்ளுகின்றேன் என்று.
'எனக்கு தெரியவில்லை கஜேந்திரகுமார் ஏற்றுக்கொள்வது அனைத்தையும் எவ்வாறு சுமந்திரன் ஏற்றுக்கொள்ளுகின்றார் என்று. ஆனால், அவ்வாறான நடவடிக்கை அனைத்தும் நடந்து முடிந்ததற்கு பிற்பாடு இதில் கையெழுத்து வைப்பதை ஒரு பிரச்சினையாக்கி, சிறுபிள்ளை தனமாக மாற்றினார்கள்' என்றார்.
'இந்த தயாரிப்பில் பலருடைய பங்களிப்பு இருந்தது. கட்சிகள் என்று பார்க்கும் போது, தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளோட் இதில் இணைந்து இருக்கின்றன.
'ஆனால் இக்கட்சியினர் யாரும் கையெழுத்து வைக்க கூடாது, நேற்று வந்தவர்கள் கையெழுத்து வைக்கலாம். இது எவ்வளவு தூரம் சரியான விடயம் என எனக்கு புரியவில்லை. விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும், சுமந்திரனும் ஏற்றுக்கொண்டார்களாம் இதை சரியென எடுத்துக் கொள்ளுவோம் இதை மாற்றுவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது' எனவும் சுரேஷ் தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago