2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘சிவாஜிலிங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது’

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந், எஸ்.நிதர்ஷன்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைளை எடுக்கக் கூடாதென, கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டக் குழு தீர்மானமொன்றை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டக் கிளைக் கூட்டம், கட்சியில் மாவட்டத் தலைமை அலுவலகத்தில், நேற்று (12) நடைபெற்றது.

இதன்போதே, மாவட்டக் கிளை மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதவாது, கட்சிக்கு அறிவிக்காமல் சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுவதில் தவறுகள் இருந்தாலும், அது தொடர்பில் கடும் நடவடிக்கைகள் எடக்கப்பட வேண்டிய தேவையில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கானத் தீர்வு விடயத்திலும் ஏனைய பிரச்சினைகளுக்கானத் தீர்வு விடயத்திலும் வழங்கப் போகும் எழுத்து மூல வாக்குறுதிகளை ஆராய்ந்ததன் பின்னரே, தேர்தல் குறித்து, கட்சி நிலைப்பாட்டொன்றை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுவரையில் சிவாஜிலிங்கம் மீது கட்சி கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாதென்றும் கட்சியில் வழமையாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் எடுக்கலாமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X