Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
தியாகதீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வை முன்னிட்டு, ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
தியாகதீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு, நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியடியில் நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அந்தவகையில், தியாக தீபம் திலீபனின் தியாகங்களை வெளிக்கொணரும் வகையிலான கவிதைகள், பாடல்கள், பேச்சு, நாடகங்கள், வில்லுப்பாட்டு ஆகிய நிகழ்வுகளில் ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ள முடியும்.
இதில் கலந்துகொள்ள விரும்புவோர், தங்களது ஆக்கங்களை, வௌ்ளிக்கிழமைக்கு (20) முன்னர் thilepanmemorial@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலதிக விவரங்களுக்கு, 076-5371949 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
4 hours ago
29 Jan 2026
29 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
29 Jan 2026
29 Jan 2026