Yuganthini / 2017 ஜூன் 21 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு போராளி ஒருவரின் அடையாளத் தகடு ஒன்று, நந்திக்கடல் வெளிப் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்தத் தகட்டில், அகவீரன் என்று எழுதப்பட்டுள்ளது. அத்துடன், தகட்டில் “ஐ:1680” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தகடு, விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
அத்துடன், குறித்த விடுதலைப் போராளி, தனது பெயரை, தகட்டு இலக்கத்தின் பின்னே பதிவு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால்-நந்திக்கடல் வெளிப் பிரதேசத்தில், 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில், இறுதி யுத்தம் நடைபெற்றது.
குறித்த இறுதிப்போர் முடிவுக்கு வந்து, எட்டு வருடங்கள் கடந்த நிலையில், ஒரு போராளியின் அடையாளத் தகடு, கையெழுத்துடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
47 minute ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
05 Mar 2026