Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால், கோப்பாயில் ஆரம்பிக்கப்படவுள்ள இயற்கை உணவுப் பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்யும் விற்பனை நிலையத்தில், வியாபார முயற்சிகளில் ஈடுபட ஆர்வமுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கோப்பாய் சந்தை கட்டடத் தொகுதியில் ஒன்பது கடைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளனவெனவும் இக்கடைகளில் பகிரங்க கேள்வி நடைமுறைகளின் பிரகாரம் சலுகைகளுடன் கூடியதாகப் போரால் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள பெண்களிடம் இருந்தே முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவுள்ளன எனவும் தெரிவித்தார்.
இயற்கை, உள்ளூர் உற்பத்தி உணவுப் பொருள்களைச் சந்தைப்படுத்ததக்க ஆற்றலும் ஆர்வமும் உடைய வசதிக்குறைவான வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களிடம் இருந்தே, விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனவெனவும், இவர் கூறினார்.
இந்தக் கடைத்தொகுதிகளில் வியாபார முயற்சிகளில் ஈடுபட ஆர்வமுள்ளோர், எதிர்வரும் ஏழு நாள்களுக்கிடையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்தில், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியுமெனவும், நிரோஷ் தெரிவித்தார்.
51 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago