Editorial / 2019 மே 20 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நீர்கொழும்பில் இருந்து வவுனியா - பூந்தோட்டம் முகாமுக்கு அழைத்துவரப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளில் ஒரு குடும்பத்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல், தனது பொறுப்பில், யாழ்ப்பாணத்துக்கு நேற்று (19) அழைத்து வந்துள்ளார்.
தென்னிந்திய திருச்சபையின் வேண்டுகோளுக்கு இணங்கவே, அவர் அந்தக் குடும்பத்தைப் பொறுபு்பேற்று, தனது பொறுப்பில் தங்க வைத்துள்ளார்.
இது குறித்து, ஊடகங்களுக்குக் கருத்துரைத்த ரட்ணஜீவன் கூல், இந்தக் குடும்பத்தில் கணவன், மனைவி உட்பட்ட நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் அந்தக் குடும்பத்தை, ஐ. நா பொறுப்பெடுக்கும் வரை, தனது பொறுப்பில் தங்க வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில், சபாநாயகர், பிரதி பொலிஸ்மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.
7 minute ago
43 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
43 minute ago
50 minute ago
53 minute ago