2026 மார்ச் 04, புதன்கிழமை

புலமைப் பரிசில்: வடக்கில் 8 சதவீதமானோரே சித்தி

எம். றொசாந்த்   / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில், வட மாகாணத்தில் எட்டு சதவீதமான மாணவர்களே சித்தியடைந்துள்ளனர் என வட மாகாண கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களிலுள்ள 891 பாடசாலைகளைச் சேர்ந்த 20, 506 மாணவர்கள் இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இவர்களில் 1,727 பேரே சித்தியடைந்துள்ளனர். இதேவேளை, 513 பாடசாலைகளிலிருந்து தோற்றிய மாணவர்களில் ஒரு மாணவன் கூட சித்தியடையவில்லை.

கிளிநொச்சி வலயத்திலிருந்து 3,141 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில், 228 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். 48 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் தோற்றிய 1,790 மாணவர்களில், 218 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். 13 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை.

துணுக்காய் கல்வி வலயத்தில் தோற்றிய 793 மாணவர்களில், 42 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். 30 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை.

மன்னார் கல்வி வலயத்தில் தோற்றிய 1,846 மாணவர்களில், 122 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். 53 பாடசாலைகளைச் சேர்ந்த சேர்ந்த மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை.

மடு வலயத்திலிருந்து 651 மாணவர்கள் தோற்றியுள்ளனர். அவர்களில் 32 மாணவர்களே சித்தியடைந்தனர். 26 பாடசாலைகளைச் சேர்ந்த சேர்ந்த மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை.

வவுனியா வடக்கு வலயத்திலிருந்து தோற்றிய 653 மாணவர்களில், 64 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். 54 பாடசாலைகளைச் சேர்ந்த சேர்ந்த மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை.

வவுனியா தெற்கு வலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய, 2,343 மாணவர்களில், 287 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். 69 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை.

தீவக வலயத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 709 மாணவர்களில், 37 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். 37 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை.

தென்மராட்சி வலயத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 867 மாணவர்களில் 96 மாணவர்களே சித்தியடைந்தனர். 25 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை.

வலிகாமம் வலயத்திலிருந்து தோற்றிய 2,811 மாணவர்களில், 301 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். 78 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை.

வடமராட்சி வலயத்திலிருந்து தோற்றிய 1,822 மாணவர்களில், 268 மாணவர்களே சித்தியடைந்தனர். 21 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை.

யாழ்ப்பாண வலயத்திலிருந்து தோற்றிய 3,080 மாணவர்களில், 532 மாணவர்களே சித்தியடைந்தனர். 51 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை என வடமாகாண கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .