2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மாவீரர்களை நினைவுகூர அழைப்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 26 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

வீடுகளில் மாவீரர்களை நினைவுகூர, ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

மாவீரர்களுக்கு பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடி வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்கள் ஊடாக பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. 

அந்நிலையில், நாளை (27) மாலை 6.05 மணிக்கு மாவீரர்கள் நினைவாக மணி ஒலிக்கச்செய்து, 6.06 மணிக்கு ஒரு நிமிட மௌன வணக்கம் செலுத்தி, மாலை 6.07 மணிக்கு, மாவீரர் நினைவுச் சுடர்களை ஏற்றி வணக்கம் செலுத்துமாறு, ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் கேரியுள்ளன.

இது தொடர்பில் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடி மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .