Princiya Dixci / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் உள்ளிட்ட 6 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், காத்தான்குடி, கல்முனை, மூதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே, இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் இவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணைந்த விஞ்ஞானச் சுகாதாரக்
கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் எனவும் கூறினார்.
இந்த ஐந்து மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று (01), அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒருவருக்கு, எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் வைத்து, நேற்று (01) பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து, தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில், 373 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதில் 6 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026