2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற மீள்பரிசீலணைக்குழு யாழ். வருகை

Super User   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ஞானசெந்தூரன்)

 

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற மீள்பரிசீலணைக்குழு எதிர்வரும் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து, யாழ். மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவுள்ளது.

இது தொடர்பாக வடமராட்சி, வலிகாமம், தென்மராட்சி, தீவகம், யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து வலயங்களின் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்களை மீள் பரிசீலனை செய்துள்ள குழுவினர் யாழ். மாவட்டத்துக்கு வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இக்குழு வவுனியா மாவட்டத்துக்கும் சென்று மீள்பரிசீலனைகளை மேற்கொள்ளவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .