Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
கரவெட்டிப் பிரதேச செயலகம் நேற்று நடத்திய சிறுவர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், கரணவாய் மூத்த விநாயகர் ஆலயத்தில் வைத்துச் சிறுமி ஒருவரால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
தொடர்ந்து அரச அதிபர், கரவெட்டிப் பிரதேச செயலர் எஸ்.சத்தியசீலன், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராஜா ஆகியோர் விழா மண்டபத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
விருந்தினர் உரை, பரிசில் வழங்கல், கலைநிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.
கரவெட்டிப் பிரதேச செயல் பிரிவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் இந்நிகழ்வில் வைத்துப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
01 Jul 2025