2020 நவம்பர் 28, சனிக்கிழமை

உரும்பிராய் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டது

Super User   / 2011 ஜனவரி 13 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கடந்த இருவாரங்களுக்கு  முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட வன்னியிலிருந்து வந்திருந்த 5 பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் அமர்தராஜா என்பவரின் சடலமே இதுவென அடையாளம் காணப்பட்டுள்ளது.

 கிணறு இன்று துப்பரவாக்கப்பட்ட போது கிணற்றின் அடியில் காணப்பட்ட அவரது கைத்தொலைபேசி ,பாதணி  மற்றும் கடைசியாக அணிந்திருந்த சாரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 யாழ். நீதவான் பிறப்பித்த உத்தரவின் பிரகாரம் இன்று காலை  கோப்பாய் பொலிஸார்; அந்தக் கிணற்றை துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையிலேயே கிணற்றின் அடியில் இருந்து கைத்தொலைபேசி , பாதணி  மற்றும் அவரது  சாரம் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--