2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கான கூட்டம்

Super User   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து கடற்றொழிலாளர்களின் சங்கங்களினதும் பிரதிநிதிகளுக்கான மாபெரும் கூட்டமொன்று இம்மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு யாழ். வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு உரிய தீர்வுகள் எட்டப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் தத்தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்கும் முகமாக யாழ் குடாநாட்டை சேர்ந்த அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X