Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 31 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
உரும்பிராய் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி எதிர்வரும் 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை பாரிய கல்விக் கண்காட்சியொன்று கல்லூரி வளாகத்தில் அதிபர் அ.ஈஸ்வரநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திருமதி. அருளேஸ்வரி வேதநாயகமும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வே.பாலசுப்பிரமணியமும் கலந்துகொள்ளவுள்ளனர்.
'நீரிழிவு நோய் வரமுன்னர் காப்பது எப்படி', 'புற்றுநோயை வெற்றி கொள்வது எப்படி' மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் தொடர்பான முக்கிய விளக்கங்கள் வழங்கப்படவுள்ளது. அத்துடன், கவின்கலைமன்ற ஆக்கங்கள், வடமோடி தென்மோடி சிந்து நடைக்கூத்துகள், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், பேய்வீடு புத்தகக் கண்காட்சி போன்றனவும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
25 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago