2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க அரசு முயற்சி: பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரன்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்து வருவதாக யாழ். பல்கலைக்கழக கணித புள்ளிவிபரத்துறை இணைப் பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தெல்லிப்பளை யூனியன் கல்லுரியின் பரிசளிப்பு விழாவில்  பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு  அவர் மேலும் உரையாற்றுகையில்,

'நாடளாவிய ரீதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்களில் 20 வீதமானோரே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றனர். மீதி 80 வீதமானவர்களில் 8 வீதமானோர் திறந்த பல்கலைகழகம் மற்றும் வெளிநாட்டு உயர்கல்விப்படிப்பெனச் செல்கின்றனர்.

ஏனைய 72 வீதமானோர் தொடர்ந்தும் உயர்கல்விகளை கற்பதில்லை. இவர்களுக்கென தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்படுவதை சில பட்டதாரிகளும் இடதுசாரிக் கட்சிகளும் எதிர்க்கின்றனர். ஆனாலும் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படவுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்களில் குறைந்த செலவில் படித்து பட்டங்களைப் பெறமுடியும். இதில் வறுமையான மாணவர்களுக்கு அரசாங்கம் வட்டி குறைந்த வங்கிக் கடன்களைக் வழங்கி உதவவுள்ளது.  அத்துடன் அரசசார்பற்ற நிறுவனங்கள் புலமைப்பரிசில்களை  வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளது. 

தனியார் பல்கலைக்கழகங்களில் தராதரமானது அரசாங்க பல்கலைக்கழகங்களின் தராதரத்திற்கு நிகராகவே இருக்கும். இனிவரும் காலங்களில் அரசாங்க பல்கலைக்கழகங்களாயினும் தனியார் பல்கலைக்கழகங்களாயினும் அங்கு கற்பிக்கப்படும் கல்வி நாட்டு நிலைமைக்கு ஏற்றதா? தொழில் வாய்ப்பை வழங்கக்கூடியதா?  என ஆய்வு செய்தே அதன் தராதரம் வழங்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--