2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

யாழ். சிறைச்சாலை பெண் கைதிகளுக்கான சிறைக்கூட புதிய கட்டிடம் திறப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

யாழ். சிறைச்சாலை பெண்கள் சிறைக்கூடத்திற்கான புதிய கட்டிடம் இன்று செவ்வாய்க்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

யாழ். சிறைச்சாலை நலன்புரி சங்க தலைவியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாந்தா அபிமன்ன சிங்க சிறைக்கூடத்தினை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

யாழ். சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம்.செனரத் பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.சிறைச்சாலை நலன்புரி சங்க உப தலைவி பொன்னம்பலம், உறுப்பினர்கள், யாழ்.சிறைச்சாலை பிரதம அதிகாரி சி.இந்திரகுமார், யாழ்.சிறைச்சாலை நலன்புரி சங்க உத்தியோகத்தர் ப.சுசிதரன் உட்பட அருட்சகோதரிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .