2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஒளி பெறக் காத்திருக்கும் யாழ். வீதிகள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழ். நகர வீதிகள் மற்றும் யாழ். மாவட்;டத்தின் பிரதான வீதிகளான பலாலி வீதி, காங்கேசன்துறை வீதி, உள்ளிட்ட வீதிகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பூட்டப்பட்ட வீதி விளக்குகளுக்கு தனியான மின் இணைப்பினை தற்போது மின்சார சபை வழங்கி  வருகின்றது.

இதன் முதற்கட்டமாக யாழ். துரையப்பா மற்றும் கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கான மின் இணைப்புக்கள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வீதி விளக்குகள் பொருத்தப்பட்டால் யாழ்ப்பாண வீதிகள் ஒளிபெறுவதுடன், இரவில் ஏற்படும் விபத்துக்கள் திருட்டுக்கள் உள்ளிட்டவையும் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .