2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கே எனது ஊதியம்: சித்தார்த்தன்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 25 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, எஸ்.கே.பிரசாத்
 
வடமாகாண சபை உறுப்பினராக இருந்து நான் பெற்றுக்கொள்ளும் ஊதியப் பணத்தினை வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
 
வடமாகாண சபையின் கன்னியமர்வு இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற போது, உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஊதியங்களை வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு வழங்கும் பட்சத்தில் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

 • சங்கே முழங்கு Friday, 25 October 2013 04:57 PM

  ஊதியத்தை வழங்காவிட்டாலும் பரவாயில்லை, ஒற்றுமையுடன் இயங்கினாலே எம்போன்ற வாக்காளர்களுக்குச் சந்தோஷம்...

  Reply : 0       0

  sutha Friday, 25 October 2013 09:38 PM

  வவுனியாவில் அப்பாவி மக்களிடம் பெற்றதையும் திருப்பிக் கொடுப்பீர்களா?

  Reply : 0       0

  VALLARASU.COM Saturday, 26 October 2013 03:38 AM

  கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்க்காரமா.?

  Reply : 0       0

  Nada Saturday, 26 October 2013 10:59 AM

  சித்தர் தன் பணத்தில்தான் புளொட்டில் தலைவராக இருந்தவர் யாரும் தம் சொந்த பணத்தில் மக்களிற்கு சேவை செய்வதில்லை. மக்களின் பணத்தில் தான் மக்களிற்கு உதவுவது...

  Reply : 0       0

  kamal Saturday, 26 October 2013 11:20 AM

  இவர் போன்ற பல உண்மையான தலைவர்கள் உருவாகினால்தான் எமது தமிழ் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். மிக்க நன்றி சித்தார்த்தன்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--