2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

முதிரைப் பலகைகளுடன் சாரதி கைது

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமான முறையில் முதிரை மரங்களை வெட்டி அவற்றை பலகைகளாக அறுத்து, வாகனமொன்றில் ஏற்றிச்சென்ற இளைஞர் ஒருவரை பளை பகுதியில் வைத்து  புதன்கிழமை (12) கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வாகன சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குறித்த நபர் முதிரை பலகைகளுடன் பயணித்துக்கொண்டிருந்த போது, வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வாகனத்தை  மறித்து சோதனையிட்ட போதே, அவை சட்டவிரோமான முறையில் எடுத்துச்செல்லப்பட்டடை கண்டுபிடிக்கப்பட்டது.

கைதான சாரதியையும் சான்றுப்பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பளை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X