Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 மே 18 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுச்சூழல் பேரழிவொன்றுக்கு, தாய்வானின் ஃபோர்மோஸா பிளாஸ்டிக்ஸ் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட உருக்கிலான வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நச்சுக்கழிவுகளே காரணம் எனக் கூறப்பட்டதான பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், சமூகவலைத்தளங்கள் மீதான அரசாங்கத்தின் ஒடுக்குமுறையில் ஓரங்கமாக வியட்னாமில் சமூகவலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிடப்பட்ட உருக்கு வளாகத்திலிருந்து வெளியேறுகின்ற கழிவு நீரினாலேயே, நீர்ப் பண்ணைகள் மற்றும் வியட்னாமின் மத்திய மாகாணங்களிலுள்ள நீர் நிலைகளில் பாரியளவில் மீன்கள் இறந்ததுக்கு காரணம் என எதிர்ப்பு தெரிவிப்போர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், பேஸ்புக்கை பயன்படுத்தி பேரணிகளை பொதுமக்கள் ஒழுங்கமைத்ததாலேயே பேஸ்புக் முடக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதேவேளை, வெளியான தகவல்களின்படி இன்ஸ்டாகிராமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சமூகவலைத்தளங்களின் உதவியுடன் பேரணிகளை ஒழுங்கமைத்ததுக்கு மேலதிகமாக, பேரணிகளில், கையால் எழுதப்பட்ட பதாதைகளுடன் பங்கேற்ற மக்களின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, மேற்கூறப்பட்ட இணையத் தடைகளின்போது பயன்படுத்தப்படும் இஸ்ரேலிய proxy சேவையான Holaவின் தகவலின்படி பேஸ்புக்கும் புகைப்படங்களை பகிரும் செயலியான இன்ஸ்டாகிராமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) தடைசெய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் முடக்கப்பட்ட பின் தமது மென்பொருள்களின் தரவிறக்கம் அதிகரித்ததாக Hola தெரிவித்துள்ளது. இது தவிர, வியட்னாமிலுள்ள அலைபேசி VPN செயலிகளும் அதிகரிப்பை காட்டியுள்ளது.
மேற்படி பேஸ்புக் முடக்கம் தொடர்பாக இதுவரையில் பேஸ்புக் கருத்து எதனையும் இதுவரையில் தெரிவித்திருக்கவில்லை. தவிர தற்போதும் பேஸ்புக் மீதான தடை நீடிக்கின்றதா என தெளிவில்லா நிலைமை காணப்படுவதுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஹனோய், சைகோன் ஆகிவற்றுக்கு வெளியேயும் இந்தத் தடை இருக்கின்றதா எனவும் தெளிவில்லாமல் உள்ளது.
8 hours ago
17 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Oct 2025