2021 மார்ச் 01, திங்கட்கிழமை

உரிமைக்காப்பு தொடர்பில் சம்சுங்குக்கெதிராக ஹுவாவி வழக்கு

Shanmugan Murugavel   / 2016 மே 26 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது உரிமைக்காப்பு மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து சக போட்டியாளரான தென்கொரிய நிறுவனமான சம்சுங்குக்கெதிராக சீன நிறுவனமான ஹுவாவி வழக்குத் தொடர்ந்துள்ளது. சம்சுங்குக்கு எதிராக கலிபோர்னியா, ஷென்ஷேன் என இரண்டு நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக ஹுவாவி கூறியுள்ளது.

ஹுவாவியின் கருத்துப்படி, சம்சங் அலைபேசிகளில் தனது அனுமதியில்லாமல், தனது cellular தொடர்பாடல்கள் மற்றும் மென்பொருள் கண்டுப்பிடிப்புக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் குறிப்பாக எந்த உரிமைக்காப்பு மீறப்பட்டுள்ளது என இதுவரையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், தனது வணிக நலன்களை பாதுகாக்கவுள்ளதாக சம்சுங் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீறப்பட்டுள்ள உரிமைக் காப்புக்களில் சில Frand என ஹுவாவி தெரிவித்துள்ளது. அந்தவகையில் இவ்வகையான Frand உரிமம் என வகைப்படுத்தப்பட்டவற்றை அதிகப்படியான இழப்பீடு இல்லாமல் எவருக்கும் உரிமையை வழங்க ஒத்துக் கொள்கின்றது என அர்த்தப்படுகிறது.

இந்நிலையில், உரிமைக்காப்பு மீறலுக்காக சம்சுங்கிடமிருந்து கொடுப்பனவுகளை பெறுவதற்கு பதிலாக சம்சுங்கினுடைய சில தொழில்நுட்பங்களைப் பெற எதிர்பார்ப்பதாக ஹுவாயினுடைய அறிவுசார் சொத்துக்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .