2021 மே 06, வியாழக்கிழமை

பௌதிகவியலுக்கான நொபெல் பரிசு இருவருக்கு

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டுக்கான பௌதிகவியலுக்கான நொபெல் பரிசு, ஜப்பானையும் கனடாவையும் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுவதாக, நொபெல் பரிசை வழங்கும் 'த றோயல் ஸ்வீடிஷ் அக்கடமி ஒப் சயன்ஸஸ்" அறிவித்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டகாகி கஜிதா, கனடாவின் கிங்ஸ்டனைச் சேர்ந்த குயீன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆர்தர் பி. மக்டொனொல்ட் ஆகியோருக்கே நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நியூத்திரனோக்களின் (நுண்நொதுமம்) அலைவு தொடர்பான அவர்களது கண்டுபிடிப்புக்காகவே அவர்களுக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நியூத்திரனோக்கள் தங்களது அடையாளத்தை மாற்றுகின்றன என்பதை வெளிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் இவர்கள் இருவரினதும் முக்கியமான பங்களிப்புகளுக்காக நொபெல் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள நொபெல் பரிசு வழங்குநர்கள், இந்தச் செயற்பாடுகளின் மூலம் நியூத்திரனோக்களுக்குத் திணிவு காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும, இது பூகோளத்தைப் பற்றிய புரிந்துணர்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .