2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

இருவேறு மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்

Princiya Dixci   / 2016 ஜூலை 14 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாணத்தில் புத்தளம், சிலாபம் ஆகிய இரண்டு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், புதன்கிழமை (13) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் -குருநாகல் பிரதான வீதியில் 3 ஆம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில், 19 வயதான மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

மற்றையசம்பவமானது, சிலாபம்- ஆனமடுவ பிரதானவீதியில், வெஹெரகெலே விகாரைக்கு அருகாமையில் வைத்து லொறியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 54 வயதானவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள், அட்டடவில்லுவ, பங்கதெனிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விரண்டு விபத்துச் சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .