Princiya Dixci / 2016 மார்ச் 02 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வணாத்தவில்லுவ, துத்தனேரியப் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) புதையல் தோண்டிக்கொண்டிருந்த வேளையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் இதன்போது 10 பேர் தப்பியோடியுள்ளதாகவும் வணாத்தவில்லுவப் பொலிஸார் தெரிவித்தர்.
தப்பியோடியவர்களுள், அரசியலுடன் தொடர்புடைய ஒருவர் உள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட நபர், குறித்த இடத்தின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரக் காலத்தில் ஸ்தூபி நிர்மாணிக்கப்பட்ட இடத்தை சுமார் 30 அடி ஆழத்துக்கும் 20 அடி அகலத்துக்கும் இவர்கள் தோண்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இடத்தில் பூஜைப் பொருட்கள் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் தப்பியோடியவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வணாத்தவில்லுவப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago