2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

நூற்றுக்கு மேற்பட்ட ஆபாசப்பட இறுவெட்டுகளுடன் 4 பேர் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம்.மும்தாஜ்)

ஆபாசப் படங்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட இறுவெட்டுகள் மற்றும் இறுவெட்டுகளை பிரதி பண்ண பயன்படுத்தப்பட்ட கணினி என்பவற்றுடன் நான்கு சந்தேக நபர்கள் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இன்று காலை சிலாபம் நகரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சீடிக்களும், கணினியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபாசப் படங்கள் அடங்கிய சீடிக்கள் விற்பதாகவும், வாடகைக்கு வழங்குவதாகவும் கிடைத்த தகவலையடுத்தே குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--