2021 ஜனவரி 23, சனிக்கிழமை

ஆனமடு பகுதி விபத்தில் 13 வயது மாணவன் பலி

A.P.Mathan   / 2012 நவம்பர் 13 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

ஆனமடு, லபுகல எனும் பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் 13 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை மேலதிக வகுப்புக்குச் சென்ற வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று காலை குறித்த மாணவன் தனது தந்தையுடன் முச்சக்கர வண்டியில் மேலதிக வகுப்புக்குச் செல்வதற்காகச் சென்று, முச்சக்கரவண்டியிலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முற்பட்டவேளை வீதியில் வந்த லொறியில் மோதியுள்ளார். ஆனமடு பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் 7ஆம் வகுப்பில் கல்வி கற்கும் டீ.எம்.நிரோஸ் சஞ்சய திசாநாயக எனும் மாணவனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவராவார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆனமடு பொலிஸார், குறித்த லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .