2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கடையாமோட்டைக்கு புதிய பிரதேசசபை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (அப்துல்லாஹ்)
 
கல்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட கடையாமோட்டை கிராமத்தில் புதிய பிரதேசசபை உபகாரியாலயம் அமைப்பது தொடர்பான  தகவல்கள்  தற்போது  புத்தளம் மாவட்ட  செயலாளர் மூலம்  திரட்டப்பட்டு வருகின்றது.
 
ஆண்டிமுனை முதல்  பனையடி வரையிலான சுமார் 22 கிலோ மீற்றர்  தூரம் கொண்ட பிரதேசத்திற்காக பிரதேசசபை உபகாரியாலயமொன்று 2005ஆம் ஆண்டு முதல் கோரப்பட்டு வந்தது.   2005ஆம் ஆண்டு வடமேல் மாகாணசபையில் உபகாரியாலயம் தொடர்பாக   விசேட யோசனை முன்வைக்கப்பட்டு  ஏகமனதான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
 
40,000க்கு மேற்பட்ட மக்கள் வாழும் இப்பிரதேசத்தின் தேவைகள்  தற்போது  கல்பிட்டி பிரதேசசபை மூலமே நிறைவேற்றப்பட்டு வருகின்றது    

ஆண்டிமுனையிலிருந்து கல்பிட்டி பிரதேசசபைக்கு சுமார் 70 கிலோ மீற்றர்  தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--