Super User / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ்)
மோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றிற்குப் போலியான ஆவணங்களைத் தயார் செய்து விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் கும்பல் ஒன்றினைச் சேர்ந்த இருவரை நேற்று கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் வழங்கிய தகவலினையடுத்து இவர்களால் திருடப்பட்ட 20 மோட்டார் சைக்கிகள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் புத்தளத்தையும், மற்றவர் ஆனமடுவ, ஆண்டிகம பிரதேசங்களையும் சேர்ந்தவர்களாவர்.
ஆண்டிகம பிரதேசத்திலுள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த 20 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கா தயாரிக்கப்பட்ட போலியான ஆவணங்கையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களில் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களைன் மோட்டார் வாகன பரிசோதகர்களின் போலியான கையொப்பங்கள் இடப்பட்டிருந்ததையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026