2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

காதலியின் நிர்வாண புகைப்படத்தை 'பேஸ்புக்'கில் பதிவேற்றிய காதலன் கைது

Menaka Mookandi   / 2010 நவம்பர் 12 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

க.பொ.த. உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை 'பேஸ்புக்' இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்த காதலனுக்கு குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காதலியுடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக ஏற்பட்ட கோபமே இவ்வாறானதொரு செயலைச் செய்யத் தூண்டியதாக மேற்படி காதலன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மேற்படி சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் அதிகாரசபையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்தே அவர் குளியாபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய பொலிஸாரும் கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் அதிகாரசபையினரும் மேற்கொண்டு வருகின்றனர். (LD)


  Comments - 0

 • tamilsalafi.edicypages.com Saturday, 11 December 2010 06:53 PM

  பாடாசாலை வயதிலேயே காதலன் நிர்வாண படம் எடுக்கிறான் என்றால் , பெற்றோர்கள் தமது
  பெண் பிள்ளைகள் விடயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். இன்று , மாலை நேர
  வகுப்புகளிலும், ஆண் பெண் கலவன் பாடசாலைகளிலும் மாணவ பருவத்தினர் கல்வி என்ற
  பெயரில் ஒன்றிணைந்து கல்வி கற்பதன் நோக்கமான ஒழுக்கசீலர்களாக இருப்பது என்ற
  நோக்கமே சிதறடிக்கப் பட்டுள்ளது. இந்த பெண் பிள்ளையின் எதிர்காலத்தை சற்று சிந்தித்து
  பாருங்ககள். பெற்றோர்களே சிந்தியுங்கள். ...இதில் இன்னும் நகைப்புக்கிடமான விடயம் தான்
  முஸ்லிம் சமூக வீழ்ச்சிக்கு காரணம் இந்த உலக கல்வியிலும் , பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள்
  பின்தங்கி இருப்பதுதான் என்று சில இஸ்லாமிய இயக்கங்கள் கூக்குரல் இடுகின்றன.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--