2025 ஜூலை 12, சனிக்கிழமை

கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Super User   / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் நகரில் கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகளை பிடிப்பதோடு அதன் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகினறனர்.

புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தணவின் உத்தரவுக்கமைய   கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு  புத்தளம் பொலிஸில்  கட்டப்பட்டு வருகின்றன.

கடந்த மூன்று நாட்களுக்குள்   பிடிக்கப்பட்ட  கட்டாக்காலி  கால்நடை  உரிமையாளர்கள்  8  பேருக்கு எதிராக பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு  அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் பிடிக்கப்பட்டு  உரிமை கோரப்படாத  கட்டாக்காலி கால்நடைகள் கொட்டுக்கச்சியிலுள்ள  NLDB பண்ணையில் விடப்படுகின்றன.

இன்றைய தினமும்  7  கட்டாக்காலி கால்நடைகள் புத்தளம் பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .