2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

இளம் பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் விளக்கமறியலில்

Super User   / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

தொலைபேசி அழைப்புக்கள் மூலம் இளம் பெண்களை ஏமாற்றி விடுதிகளுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மாவட்ட நீதிபதி ஜகத் ஏ. கஹதகமகே உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலை மாணவி ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் சிலாபம் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொலைபேசி இலக்கத்தை வைத்தே பொலிஸார் குறித்த சந்தேகநபரை  கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .