2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

தங்கொட்டுவ வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

தங்கொட்டுவ – பன்னல வீதியின் அட்டியாவ என்னுமிடத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே மரமாகியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது...

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் தங்கொட்டுவ – பன்னல வீதியில் பயணம் செய்துகொண்டிருக்கையில் அட்டியாவ என்னுமிடத்தில் வைத்து எதிரே வந்த லொறி ஒன்றுடன் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் ஸ்தலத்திலேயே மரணமாகியுள்ளனர்.

தங்கொட்டுவ, சிங்ககுளியைச் சேரந்த தனுஷ்க பிரசாத் (வயது 26), நிமேஷ் தனுஷ்க (வயது 17) ஆகிய இரு இளைஞர்களுமே ஸ்தலத்தில் பலியாகியவர்களாவர்.

மரணமானவர்களின் பிரேதம் தற்சமயம் தங்கொட்டுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--