2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மாணவிகளை லொட்ஜில் தடுத்துவைத்திருந்த பொலிஸாருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2011 ஜூன் 14 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபம் பிரதேச மகளிர் பாடசாலை ஒன்றின் இரு மாணவிகளை  கைது செய்து முறையற்ற வகையில் லொட்ஜ் ஒன்றில் தடுத்து வைத்திருந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களை இம்மாதம் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பதில் நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்விரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேற்குறிப்பிட்டபட்ட  இவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

இவ்விரு கான்ஸ்டபிள்களும் கொழும்பு பிரதேச பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .