Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 20 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
தனது சகோதரியொருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிக் படுகொலை செய்ததுடன், தனது தாயையும் தாக்கி படுகாயங்களுக்குள்ளாக்கிய சம்பவமொன்று சிலாபத்தில் நேற்று ஞாயி;ற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சிலாபம் விலத்த எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான எச்.சுமித்திரா (வயது 52) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் ஆவார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தாயாரான எக்னஸ் பெர்ணான்டோ (வயது 79) என்பவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
காணித் தகராறு காரணமாக தனது சகோதரியின் வீட்டிற்கு கூரிய ஆயுதத்துடன் சென்ற சந்தேக நபர், சகோதரியை தாக்கியபோது தாய் தனது மகளை காப்பாற்ற முற்பட்ட வேளையில் அவர் தாயையும் தாக்கி படுகாயங்குள்ளாக்கியுடன் சகோதரியையும் படுகொலை செய்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி தாய் தனக்குரிய காணியொன்றை தனது மகளுக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த மகன் தனது சகோதரியை படுகொலை செய்தும் தாயையும் படுகாயங்களுக்குள்ளாக்கியதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
மேற்படி சந்தேக நபர் இதற்கு முன்னரும் தனது சகோதரி மற்றும் தாயைக் கொலை செய்ய முற்பட்டபோதிலும், அது பலனளிக்கவில்லையெனத் தெரியவருகிறது.
சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Apr 2021
16 Apr 2021