2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வடமத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வண்டி வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2011 ஜூலை 18 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வடமத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் அம்பியூலன்ஸ் வண்டிப் பிரச்சினைக்குத் தீர்வு கானுமுகமாக 20 அம்பியுலன்ஸ் வண்டிகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் அதி கஷ்டப் பிரதேச வைத்தியசாலையொன்று தெரிவு செய்யப்பட்டு அதனை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதலாவதாக ஹபரன வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வடமத்திய மாகாணத்திலுள்ள ஆறு வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் வைத்தியர்களுக்கான விடுதி போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான   சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இவைகளை நிவர்த்தி செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--