2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)            

கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திப்பட்டுவௌ பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸ் நிலைய போக்குவரத்து  பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்னாயக்கதெரிவித்தார்.

மோட்டார் சைக்கிலில்  வந்த நபர் எண்ணெய் பவுசர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.  

இவ்விபத்தில் கெ;ககிராவ மெதகம பகுதியை சேர்ந்த எம். அநுரஹேரத் (வயது31) என்பவரே மரணமடைந்தவராவார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.         


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X