Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில்அஹமட்)
அநுராதபுரம் 5ஆம் வாய்க்கால் பகுதியில் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் பாதுகாப்பற்ற ரயில்க் கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.
விஜயபுர பகுதியைச் சேர்ந்த சமீர வீரரத்ன (வயது 27) என்ற இளைஞரே மரணமடைந்தவராவார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணையை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
22 minute ago
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025