2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மிஹிந்தலையில் கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)               

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலங்குளம் பகுதியில் கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் நபரொருவரும் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு தயாரிப்பான எஸ்.எப். 87 வகையைச் சேர்ந்த கைக்குண்டொன்றே கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், தமக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின்; அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டு, கைக்குண்டை செயலிழக்கச்செய்யும் பிரிவினரின் உதவியுடன் செயலிழக்க செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் முன்னாள்; வான்படை வீரர் ஆவாரெனவும்  பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .