2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

மாரவிலவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2011 நவம்பர் 19 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)
மாராவில பிரதேசத்தில் நேற்றி  வெள்ளிக்கிழமை இரவு  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் பலியாகியுள்ளார்.

இதில் மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபரின் மேற்படி நபரின் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாராவில முதுகட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பொனிபஸ் கிங்ஸ்லி என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் இத்தாலி நாட்டில் தொழில் புரிந்துவிட்டு அண்மையில் நாடு திரும்பியவரென்று இவரது மனையிவும் இத்தாலியில் வசிப்பதோடு தனது பிள்ளையின் வைபவம் ஒன்றுக்காக இவர் இலங்கைக்கு வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் மாராவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X