2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பெண்ணை தாக்கியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பெண் ஒருவரை கோடரியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் இருவரை கைதுசெய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தங்கொட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை இரவு 09 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்தத்  தாக்குதலில் காயமடைந்த பெண் தங்கொட்டுவை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவை, மொஹொட்டிமுல்லை  பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இந்தத் தாக்குதலில் 36 வயதான  பெண் ஒருவரே காயமடைந்துள்ளார்.

தான் வீட்டிலிருந்தபோது,  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தன்னைக் கோடரியால் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக  பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .