Thipaan / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்
எதிர்வரும் 17ஆம் திகதி உங்களுடைய வாக்குப்பலத்தைக் காட்டி எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை எங்களுக்கான தலைமைத்துவத்தை எங்களுக்கான நாடாளுமன்ற உறுப்புரிமையை பாதுகாத்து விட்டோம் என்ற செய்தியை உலகத்துக்குச் சொல்லுங்கள் என வர்த்தக வாணிபத்துறை அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
மதுரங்குளி-விருதோடைக் கிராமத்தில் ஐ.தே.கவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் மூவரையும் ஆதரித்து புதன்கிழமை(12) மாலை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த முறை மாத்திரமாவது ஒன்று பட்டு உங்களுடைய வாக்குடைய பலத்தை பிரதமர், ஜனாதிபதி மற்றும் இந்த நாட்டுக்கு காட்டுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் கடந்த 26 வருடங்களாக ஒரு சிறுபான்மை கூட நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago