Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முஹம்மது முஸப்பிர், ஹிரான் பிரியங்கர ஜயசிங்ஹ
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் ஐவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் நிரோஜன் பெரேரா, வடமேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹேக்டர் அப்புஹாமி, வடமேல் மாகாண சபையின் மந்திரயான சாந்த சிசிர குமார மற்றும் அசோக் பிரியந்த ஆகியோரே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவில் ஹெக்டர் அப்புஹாமி, சாந்த சிசிர குமார, அசோக் பிரியந்த ஆகிய அமைச்சர்கள் முதன் முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்ட விருப்பு வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி - (ஐந்து ஆசனங்கள்)
1. பாலித ரங்கே பண்டார - 66,960
2 நிரோஜன் பெரேரா - 59,337
3. ஹெக்டர் அப்புஹாமி - 55,475
4. சாந்த சிசிர குமார - 36,390
5. அசோக் பிரியந்த – 35,418
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - (மூன்று ஆசனங்கள்)
1. சனத் நிசாந்த பெரேரா - 68,240
2. பிரியங்கர ஜயரட்ன - 59,352
3. அருந்திக பெர்னாண்டோ - 47,118
கடந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அங்கம் வகித்த அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, தயாசிரித திசேரா, பிரதி அமைச்சர்களான நியோமால் பெரேரா, விக்டர் அண்டனி ஆகியோர் இம்முறை போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளனர்.
இதேநேரம், வழமை போன்று இம்முறையும் புத்தளம் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெறவில்லை. கடந்த 26 வருட காலமாக புத்தளம் தொகுதிக்கான முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago