2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற நபருக்கு 3 மாத சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

எந்தவித ஆவணமுமின்றி  மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்றதான குற்றத்தை ஒப்புக்கொண்ட  நபரொருவருக்கு 29000 ரூபா தண்டத்துடன்,  3 மாதகால கடூழியச்சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை    அநுராதபுரம் மேலதிக நீதிபதி சந்திம எதிரிமன்ன  முன்னிலையில் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்தார்.

ஆடம்பனே பகுதியைச் சேர்ந்த றன்பண்டாகே ரணதுங்க என்பவருக்கே தண்டப்பணத்துடன் கடூழியச்சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

குறித்த நபர் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம், வரிப்பத்திரம் ஆகிய ஆவணங்கள் எதுவுமின்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றபோது,  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த பொலிஸாரே குறித்த நபரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--