2021 ஜனவரி 20, புதன்கிழமை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; 3 பொலிஸாருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஜனவரி 03 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

25,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திகொள்ளாவ நீதவான் கயான் மீகஹகே  உத்தரவிட்டார்.

வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிஓயா பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து 25,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .