2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் 31ஆம் திகதி வரை விளக்கமறியல்

Super User   / 2011 ஒக்டோபர் 18 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ஏழு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ நீதவான் லத்த பிரியதர்ஷன சில்வா இன்று செவ்வாய்க்கிழமை
உத்தரவிட்டார்.

கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணபத்திராவ, யோதஅல பகுதியிலுள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க காணியொன்றில் குழுவொன்று புதையல் தோண்டுவதாக கெக்கிராவ பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டி.பீ.சோமபாலவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் விரைந்த போதே சந்தேக நபர்கள் ஏழு பேரையும் கைது செய்துள்ளனர்.

இதன்போது, புதையல் தோண்ட பயன்படுத்திய பெகோ வாகனம், ஆயுதங்கள் உள்ளிட்ட  பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--