Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 29 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் மாவட்டத்தில் மூன்று பிரதான வீதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்கென வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு 60 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ் மாகாண அமைச்சர் சனத் நிவாந்த பெரேராவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி புளிச்சாக்குளம் - உடப்பு பிரதான வீதி, கட்டைக்காடு –கொந்தாந்தீவு வீதி, புத்தளம் குட்செட் உள்ளக வீதி ஆகிய மூன்று வீதிப் புனரமைப்புப் பணிகளுக்கென தலா 20 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த விதியின் புனரமைப்புப் பணிகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago