Editorial / 2017 ஜூலை 13 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தயாரத்தன எம்போகம
அநுராதபுரம் - யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பிரதான போக்குவரத்துப் பாதையின் ஹத்தரெஸ்வெல ரயில் குறுக்கு வீதியிலிருந்து, 25 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம், நேற்று (13) கண்டெடுக்கப்பட்டதாக, அநுராதபுரம் பொலிஸார் கூறினர்.
கவரக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த தனுஷ்க தனஞ்ஜய பண்டார என்ற இளைஞனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என, அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது தலைப் பகுதியில், காயமொன்று காணப்படுவதாகவும் இவரை சிலர் படுகொலை செய்துவிட்டு, இவ்விடத்தில் கொண்டுவந்து போட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்ட பொலிஸார், இல்லாவிடின் குறித்த பகுதியில் வைத்து, அவ்விளைஞன் விபத்தொன்றை எதிர்நோக்கியிருக்கக்கூடும் என்றும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அநுராதபுரம் பொலிஸார், சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்ததாகவும் கூறினர்.
4 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago